'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 10-08-2025
'கூலி' டிக்கெட் விலை ரூ. 2,000?...அதிர்ச்சியில் ரசிகர்கள்
சூப்பர் ஸ்டார் ரஜினியின் நடிப்பில் உருவாகியுள்ள கூலி படம் வருகிற 14 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, வட இந்தியா உட்பட உலகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில், ரசிகர்கள் முண்டியடித்து முன்பதிவு செய்து வருகிறார்கள்.
முன்பதிவு தொடங்கிய அனைத்து மாநிலங்களிலும், ஜெட் வேகத்தில் விற்பனையாகிறது. இந்நிலையில், 'கூலி' டிக்கெட் ரூ. 2,000 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூருவில் உள்ள ஒரு திரையரங்கில், ஆன்லைன் முன்பதிவிலேயே ரூ. 2,000க்கு டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. சில இடைத்தரகர்கள் ரூ. 5,000 வரை டிக்கெட் விற்பனையில் ஈடுபடுகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-10 07:16 GMT