முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் பேச்சு
துணை ஜனாதிபதி தேர்தல் செப்டம்பர் 9-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் தமிழகத்தை சேர்ந்த பா.ஜ.க. மூத்த தலைவரும், மராட்டிய கவர்னருமான சி.பி.ராதாகிருஷ்ணன் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில் மத்திய மந்திரி ராஜ்நாத் சிங், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது ராஜ்நாத் சிங், துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலினிடம் கேட்டுக் கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-18 06:14 GMT