"எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
"எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது? - செல்வப்பெருந்தகை கேள்வி
சேலம் கம்யூனிஸ்ட் மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை பேசியதாவது:-
காங்கிரஸ், கம்யூனிஸ்டுகளை குறை கூற பழனிசாமிக்கு என்ன தகுதி இருக்கிறது?. பாஜகவின் வருங்காலத் திட்டங்கள் என்ன என்பது பழனிசாமிக்குத் தெரியாதா?. தமிழகத்தில் பாசிச சக்திகள் காலூன்ற ஜனநாயகத்தை சிதைக்க முயற்சிக்கிறார்கள்; பாசிச சக்திகளை ஒன்றிணைந்து முறியடிக்க வேண்டும் என்று கூறினார்.
சேலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில மாநாட்டில் கொமதேக ஈஸ்வரன் பேசுகையில், “இந்தியா வளர வேண்டும் என்றால் உ.பி., குஜராத் மட்டும் வளரக் கூடாது. ஒட்டுமொத்த மாநிலமும் வளர வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில் அதிக பங்கு அம்பானி, அதானியிடம் இருக்கிறது. அது ஏழைகளின் வளர்ச்சியா? என்று கூறினார்.
Update: 2025-08-16 14:14 GMT