சென்னையில் 10 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

சென்னையில் 10 மணி நேரத்துக்கு மேலாக நடைபெற்ற அமலாக்கத்துறை சோதனை நிறைவு

தமிழக ஊரக வளர்ச்சித் துறை அமைச்சரும், தி.மு.க. துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பெரியசாமியின் திண்டுக்கல் மற்றும் சென்னை வீடுகள், அவரது மகனும், பழனி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திரா வீடுகளில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், கடந்த 10 மணி நேரமாக சென்னையில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை தற்போது நிறைவு பெற்றுள்ளது. இருப்பினும் திண்டுக்கல்லில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.

Update: 2025-08-16 13:06 GMT

Linked news