தேர்தல் ஆணையம் சார்பில் நாளை செய்தியாளர் சந்திப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
தேர்தல் ஆணையம் சார்பில் நாளை செய்தியாளர் சந்திப்பு
வாக்குத் திருட்டு, பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் விவகாரங்கள் நாடு முழுவதும் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் நாளை (ஆக.17) தேர்தல் ஆணையம் சார்பில் செய்தியாளர் சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பீகார் SIR, வாக்குத் திருட்டு விவகாரங்களை மக்களிடம் கொண்டு செல்ல, 'வாக்குரிமை யாத்திரை' என்ற பெயரில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை பீகாரில் பயணத்தை தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-08-16 13:04 GMT