எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025
எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது வழக்குப்பதிவு
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ. விடுதி வளாகத்திற்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத்துறையினர் மீது திருவல்லிக்கேணி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி அறைக்குச் செல்லும் நுழைவு வாயிலுக்கு தலைமைச் செயலக ஊழியர்கள் பூட்டு போட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. மேலும் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டின் பூட்டை உடைத்து அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Update: 2025-08-16 08:18 GMT