அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-08-2025

அமலாக்கத்துறை சோதனைகள் மூலம் தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது - கனிமொழி


தூத்துக்குடியில் தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

"வருமான வரித்துறை, அமலாக்கத்துறை சோதனைகள் மூலமாக தி.மு.க.வினரை அச்சுறுத்த முடியாது. தேர்தல் ஆணையத்தை கையில் வைத்துக்கொண்டு ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. தி.மு.க. அமைச்சர்களை ரெய்டுகள் மூலம் பயமுறுத்தலாம் என மத்திய பா.ஜ.க. அரசு நினைக்கிறது. மத்திய பா.ஜ.க.வை எதிர்க்கும் கட்சிகளை தாக்கும் கருவியாக விசாரணை அமைப்புகள் மாற்றப்பட்டுள்ளது. எந்த பயமுறுத்தலாலும் தி.மு.க.வினரை அச்சுறுத்தி விட முடியாது."

இவ்வாறு அவர் கூறினார்.


Update: 2025-08-16 07:14 GMT

Linked news