தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசு பெண்கள்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025
தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி விடுதியில் 53 மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இந்த விடுதியில் வழக்கம் போல இன்று காலை மாணவிகளுக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதனை சாப்பிட்ட 6-ம் வகுப்பு மாணவிகள் மற்றும் 12-ம் வகுப்பு மாணவிகள் என 9 பேருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு 9 மாணவிகளும் தற்போது தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Update: 2025-07-16 11:28 GMT