கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்டுகளை கடிந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 16-07-2025

கழிவறை பற்றாக்குறை விவகாரம்; ஐகோர்ட்டுகளை கடிந்து கொண்ட சுப்ரீம் கோர்ட்டு

சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரித்தபோது, இதற்காக வேதனை தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து கோர்ட்டு வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என கூறி அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்க 8 வார கால அவகாசமும் அளித்துள்ளனர்.

அப்படி, அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் அமர்வு கடுமையாக குறிப்பிட்டுள்ளது.

Update: 2025-07-16 11:05 GMT

Linked news