தூய்மைப்பணியாளர்கள் கைது விவகாரம்: சென்னையில்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
தூய்மைப்பணியாளர்கள் கைது விவகாரம்: சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் சண்முகம் கூறியதாவது:-
போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை இரவோடு இரவாக காவல்துறை அப்புறப்படுத்தியது முற்றிலும் சட்டத்திற்கும், நியாயத்திற்கும் புறம்பானது; அத்துமீறிய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரடியாக தலையிட்டு தூய்மைப் பணியாளர்களின் பிரச்னைகளுக்கு நியாயமான தீர்வு காண வேண்டும். சென்னையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Update: 2025-08-14 08:11 GMT