ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து-... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
ரசிகர் கொலை வழக்கு: நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து- சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
நடிகர் தர்ஷன் ஜாமீனுக்கு எதிரான கர்நாடக அரசின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று (வியாழக்கிழமை) நீதிபதிகள் ஜே பி பர்திவாலா மற்றும் ஆர் மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அதில், தர்ஷன் உட்பட 7 பேருக்கு வழங்கிய ஜாமீனை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் சட்டத்திற்கு மேலானவர்கள் யாரும் இல்லை என்று கூறிய சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டின் உத்தரவு இயந்திரத்தனமாக உள்ளது என்றும், ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும், சாட்சிகளும் மிரட்டப்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
Update: 2025-08-14 07:06 GMT