தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து வெளியூர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025
தொடர் விடுமுறை.. சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் உயர்வு
தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் 3 மடங்கு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி சென்னையில் இருந்து மதுரை செல்ல ரூ.4,000 வரை கட்டணம் வசூல் செய்வதாக பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். வழக்கமாக சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.600 ரூ800 ரூபாய் வரை ஆம்னி பேருந்து கட்டணம் வசூல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
சென்னையிலிருந்து நெல்லை, சேலம், திருச்சி வழித்தடங்களுக்கு ரூ.1,500 - ரூ.3,000 வரை கட்டணம் வசூல் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
Update: 2025-08-14 06:12 GMT