வட இந்திய மாநிலங்களில் கனமழை: வெள்ள பாதிப்பால்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 14-08-2025

வட இந்திய மாநிலங்களில் கனமழை: வெள்ள பாதிப்பால் மக்கள் அவதி


நாட்டின் தலைநகர் டெல்லி உள்பட வட இந்திய மாநிலங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இமாசல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டி தீர்த்த மழையால் பெரும்பாலான இடங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் முக்கிய சாலைகளில் கூட முட்டளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர். டெல்லியில் இன்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-14 05:33 GMT

Linked news