தூய்மைப்பணியாளர் போராட்டம் தொடரும் என அறிவிப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

தூய்மைப்பணியாளர் போராட்டம் தொடரும் என அறிவிப்பு

சென்னை ரிப்பன் மாளிகை அருகே ராயபுரம், திருவிக நகர் மண்டலங்களைச் சேர்ந்த தற்காலிக தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம் தொடரும் என போராட்டக்குழு அறிவித்துள்ளது.

இதன்படி கோரிக்கை நிறைவேறும் வரை பணிக்கு திரும்ப மாட்டோம் என்று தூய்மை பணியாளர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். 

முன்னதாக தனியார் நிறுவனம் மூலம் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டாலும் தொழிலாளர்களுக்கு 100 சதவீதம் பணி பாதுகாப்பு வழங்கப்படும் என உறுதி அளித்த சென்னை மாநகராட்சி, போராட்டத்தை கைவிட வேண்டுமென கேட்டுக் கொண்டிருந்தது.

Update: 2025-08-12 06:40 GMT

Linked news