நாடாளுமன்ற மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 12-08-2025

நாடாளுமன்ற மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மாநிலங்களவை இன்று மீண்டும் தொடங்கியநிலையில், விவாதம் கோரிய 21 நோட்டீசுகள் நிராகரிக்கப்பட்டது. இதற்கு தி.மு.க எம்.பி திருச்சி சிவா உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் நாட்டில் முக்கியமான வாக்காளர் பட்டியல் முறைகேடு பிரச்னை குறித்து விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என்று திருச்சி சிவா வலியுறுத்தினார்.

அதேபோல, திருணாமுல் காங்கிரஸ் உறுப்பினர் டெரிக் ஓபிரையன் இதே பிரச்சினை எழுப்பினார், ஆனால் அவரை தொடர்ந்து பேச அனுமதிக்கவில்லை

இதனைதொடர்ந்து ஏற்பட்ட கடும் அமளி காரணமாக மாநிலங்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

மக்களவை ஏற்கனவே 12 மணி வரை ஓத்தி வைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Update: 2025-08-12 06:18 GMT

Linked news