அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 18-08-2025
அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ்
பா.ம.க. பொதுக்குழுவில் அன்புமணி மீது 16 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டதை தொடர்ந்து, அன்புமணியிடம் விளக்கம் கேட்டு ராமதாஸ் தரப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், 7 நாட்களில் விளக்கம் அளிக்காவிட்டால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கை குழு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், நோட்டீஸ் கிடைத்தாலும் எந்த பதிலும் அளிக்க போவதில்லை என அன்புமணி ராமதாஸ் தரப்பு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Update: 2025-08-18 06:49 GMT