ரூ.54 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை...இன்றைய நிலவரம் என்ன?


Today Gold rate in Chennai 13.09.2024
x

File image

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.960 உயர்ந்துள்ளது.

சென்னை,

சர்வதேச சந்தை வர்த்தகத்தின் அடிப்படையில் இந்தியாவில் தினந்தோறும் தங்கம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அவ்வகையில், கடந்த சில மாதங்களாக தங்கம் விலை ஏறுமுகமாக இருந்தது. கிடுவிடுவென உயர்ந்து ஜூலை மாதம் ஒரு சவரன் ரூ.55 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை எட்டியது.

அதன்பின்னர் மத்திய பட்ஜெட் சற்று ஆறுதல் அளித்தது. மத்திய பட்ஜெட்டில் தங்கம் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் மளமளவென விலை குறைந்தது. அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்து, ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு கீழ் சென்றது.

ஆனால் இந்த ஆறுதல் சில நாட்கள் மட்டுமே நீடித்தது. மீண்டும் பழையபடி ஏற்ற இறக்கத்துடன் உள்ளது. உயரும்போது அதிக அளவில் உயர்வதும், சரியும்போது சொற்பமாக சரிவதும் என இருந்ததால், ஒரு சவரன் தங்கம் 53 ஆயிரம் ரூபாயை கடந்தது. இதையடுத்து, நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கு விற்று வந்த நிலையில், இன்று தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி,இன்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 உயர்ந்து ரூ.54,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.6,825-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 3 ரூபாய் 50 காசுகள் உயர்ந்து ரூ.95.00-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


Next Story