4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.;
தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்,
தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென் இந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் காலை 10 மணி வரை லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதேபோல், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.