7 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது;

Update:2025-08-10 13:46 IST

சென்னை,

தமிழகத்தில் கடலோர மாவட்டங்களில் வெயில் வெளுத்து வாங்கினாலும் உள் மாவட்டங்களிலும் , மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், இன்று 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர், கடலூர், அரியலூர், கள்ளக்குறிசி மற்றும் சிவகங்கை ஆகிய 7 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

சென்னையை பொறுத்தவரை இன்று மற்றும் நாளை ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்