சாலையில் கழன்று விழுந்த அரசு பேருந்தின் கதவு.. வாகன ஓட்டிகள் அதிர்ச்சி

அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.;

Update:2025-07-28 16:41 IST

கோவை,

பொள்ளாச்சியில் இருந்து இன்று காலை வால்பாறை நோக்கி அரசு பஸ் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பொள்ளாச்சி வால்பாறை சாலையில் பேருந்தின் கதவு, திடீரென கழன்று சாலையில் விழுந்தது. கழவு விழுந்த நேரத்தில் சாலையோரம் இருந்த பொதுமக்களும், பின்னாடி வந்த வாகன ஓட்டிகளும் அதிர்ச்சி அடைந்து அங்கிருந்து ஒடினர். அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் எந்தவித காயமும் இல்லை.

பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த தானியங்கி கதவு வேலை செய்யாத நிலையில், அதை சரிசெய்ய பல முறை பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அதிகாரிகளிடம் முறையிட்டும், பேருந்தை முறையாக பராமரிக்காத நிலையில், இன்று சாலையில் கதவு கழன்று விழும் அவலம் நடைபெற்றுள்ளது.

 

Tags:    

மேலும் செய்திகள்