தமிழ்நாட்டில் இன்று 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது;
தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 21) ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்ட மலைப் பகுதிகளில் இன்றும், நாளையும் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.