இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளது: மத்திய மந்திரி பியூஷ் கோயல்

இந்திய பொருளாதார வளர்ச்சி 2026-ம் ஆண்டில் 6.4 சதவீதமாக இருக்கும் என சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது.;

Update:2025-08-03 20:28 IST

புதுடெல்லி,

உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின்(ஐ.எம்.எப்.) ஜூலை மாத அறிக்கை வெளியானது. அதில், கடந்த 2024-ம் ஆண்டில் இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 6.5 சதவீதமாக இருந்ததாகத் தெரிவித்துள்ள ஐ.எம்.எப்., 2025 மற்றும் 2026-ம் ஆண்டுகளில் 6.4 சதவீதமாக இருக்கும் என கணித்துள்ளது. உலக அளவில் வேறு எந்த நாட்டையும்விட இந்தியாவின் வளர்ச்சி விகிதம் அதிகம் இருப்பதாக ஐ.எம்.எப். கணித்துள்ளது.வளர்ந்த பொருளாதாரங்களில் அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2024-ல் 2.8 சதவீதமாக இருந்ததாகவும், 2025-ல் இது 1.9 சதவீதமாகவும், 2026-ல் இது 2 சதவீதமாகவும் இருக்கும் என ஐ.எம்.எப். கணித்துள்ளது.

சீனவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடந்த 2024-ல் 5 சதவீதமாக இருந்த நிலையில் அது 2025-ல் 4.8 சதவீதமாகவும், 2026-ல் 4.2 சதவீதமாகவும் இருக்கும் என ஐ.எம்.எப். தெரிவித்துள்ளது.இந்திய பொருளாதாரம் மடிந்துவிட்டது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் சில தினங்களுக்கு முன்பு கூறி இருந்த நிலையில், ஐ.எம்.எப்.-ன் இந்த அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதைச்சுட்டிக்காட்டி இந்திய பொருளாதாரம் செழிப்பாக உள்ளதாக மத்திய வர்த்தகத் துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்