பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கியவர்களின் சிலைகள் திறப்பு
பரம்பிக்குளம் - ஆழியாறு பாசனத் திட்டம் உருவாக்கியவர்களின் சிலைகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். முன்னாள் முதலமைச்சர் காமராஜர், மறைந்த முன்னாள் மத்திய மந்திரி சி.சுப்பிரமணியம், மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி நா.மகாலிங்கம் மற்றும் பழனிசாமி கவுண்டர் ஆகியோரின் சிலைகளை முதல்-அமைச்சர் திறந்து வைத்தார்.
அதனை தொடர்ந்து பரம்பிக்குளம், ஆழியாறு அணை கட்டுமான பணியின்போது உயிரிழந்த தொழிலாளர்களின் நினைவாக கட்டப்பட்ட நினைவரங்கத்தை திறந்து வைத்தார். பின்னர் வி.கே.பழனிசாமி அரங்கத்தினை ரிப்பன்வெட்டி திறந்து வைத்தார். பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட பணிகள் தொடர்பான புகைப்பட கண்காட்சி மற்றும் திட்டத்தின் மாதிரி வடிவத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.