நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் இன்று காலை 11... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 11-08-2025

நாடாளுமன்ற இரு அவைகளும் வழக்கம்போல் இன்று காலை 11 மணிக்குக் கூடின. மக்களவையில் வழக்கமான அலுவல்கள் இன்று காலை தொடங்கியதும், எதிர்க்கட்சிகள் பல்வேறு விவகாரங்களை எழுப்பி கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் கோபம் அடைந்த சபாநாயகர் ஓம் பிர்லா, தொடர்ந்து 14 வது நாளாக அவை நடவடிக்கைகள் பாதிக்கப்படுகிறது.

மக்களின் வரிப்பணம் வீணாகிறது. உறுப்பினர்கள் அவை நடவடிக்கைக்கு இடையூறு செய்யக்கூடாது என்று வலியுறுத்தினார். எனினும், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை இன்று பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதேபோல ராஜ்யசபாவிலும் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-11 06:03 GMT

Linked news