நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இலங்கை


நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த இலங்கை
x

Image Courtesy: @ICC

இலங்கை - நியூசிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

காலே,

நியூசிலாந்து கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி நாளை காலேவில் தொடங்குகிறது. இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தொடருக்கான நியூசிலாந்து அணி டிம் சவுதி தலைமையிலும், இலங்கை அணி தஞ்செயா டி சில்வா தலைமையிலும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நாளை தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான விளையாடும் வீரர்களை இலங்கை அணி அறிவித்துள்ளது. இதில் டாப் ஆர்டர் வரிசையில், திமுத் கருணாரத்னே, பதும் நிசாங்கா, தினேஷ் சண்டிமால் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இதையடுத்து மிடில் ஆர்டர் வரிசையில் ஏஞ்சலோ மேத்யூஸ், காமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா, குசல் மெண்டிஸ் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். தொடர்ந்து ஆல்ரவுண்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்கள் வரிசையில் ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, அசிதா பெர்ணாண்டோ ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இலங்கை அணியின் விளையாடும் வீரர்கள் விவரம்;

திமுத் கருணாரத்னே, பதும் நிசாங்கா, தினேஷ் சண்டிமால், ஏஞ்சலோ மேத்யூஸ், காமிந்து மெண்டிஸ், தனஞ்செயா டி சில்வா (கேப்டன்), குசல் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), ரமேஷ் மெண்டிஸ், பிரபாத் ஜெயசூர்யா, லஹிரு குமாரா, அசிதா பெர்ணாண்டோ.



Next Story