உலகக் கோப்பை கால்பந்து: நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி - ரொனால்டோ ?


உலகக் கோப்பை கால்பந்து: நேருக்கு நேர் மோதும் மெஸ்ஸி - ரொனால்டோ ?
x

மெஸ்ஸியும், ரொனால்டோவும் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.

பெர்லின்,

நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா உள்ளிட்ட 48 அணிகள் இடையிலான 23-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு (2026) ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இந்நிலையில் இந்த உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான போட்டி அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்கும் 48 அணிகளும் 12 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 நாடுகள் இடம் பெற்றுள்ளன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங் களை பிடிக்கும் அணிகள், 3-வது இடத்தை பிடிக்கும் சிறந்த 8 அணிகள் என 32 நாடுகள் நாக்-அவுட் சுற்றுக்கு தகுதி பெறும். இதில் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா 'ஜே' பிரிவில் இடம் பெற்றுள்ளது. ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி 'கே' பிரிவில் இடம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், மெஸ்ஸியும், ரொனால்டோவும் காலிறுதியில் நேருக்கு நேர் மோதும் சூழல் உருவாகியுள்ளது.அர்ஜெண்டினா, போர்ச்சுகல் அணிகள் தங்களது குரூப்களில் டாப் இடத்தை பிடித்து, ரவுண்ட் ஆப் 32 மற்றும், ரவுண்ட் ஆப் 16 சுற்றுகளில் வெற்றி பெற்றால், இரு அணிகளும் காலிறுதியில் மோதும் நிலை வரும்.

ஒருவேளை காலிறுதியில் அர்ஜென்டினா - போர்ச்சுகல் அணிகல் மோதினால், அந்த போட்டி கால்பந்து வரலாற்றில் அதிக எதிர்பார்ப்புடன் நடக்கும் போட்டியாக அமையும்.

1 More update

Next Story