சூர்யவன்ஷி சதம் வீண்... பீகார் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி


சூர்யவன்ஷி சதம் வீண்... பீகார் அணியை வீழ்த்தி மராட்டியம் வெற்றி
x

மராட்டியம் தரப்பில் அதிகபட்சமாக பிரித்வி ஷா 66 ரன்கள் அடித்தார்.

கொல்கத்தா,

சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற ஒரு ஆட்டத்தில் பீகார் - மராட்டியம் (குரூப் பி) அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற மராட்டிய அணியின் கேப்டன் பிரித்வி ஷா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த பீகார் அணி தொடக்க ஆட்டக்காரர் ஆன வைபவ் சூர்யவன்ஷியின் அபார சதத்தின் உதவியுடன் 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்கள் அடித்தது. சூர்யவன்ஷி 108 ரன்களுடனும், ஆயுஷ் லோஹருகா 25 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

இதனையடுத்து 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய மராட்டிய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் ஆன பிரித்வி ஷா அதிரடியாக ஆடி அணிக்கு வலு சேர்த்தார். வெறும் 30 பந்துகளில் 66 ரன்கள் அடித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த வீரர்களில் நிரஜ் ஜோஷி 30 ரன்கள், ரஞ்சித் நிகாம் 27 ரன்கள், நிகில் நாய்க் 22 ரன்கள் ஆகியோரின் கணிசமான பங்களிப்பால் மராட்டிய அணி வெற்றி பெற்றது. 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் அடித்த மராட்டிய அணி 3 விக்கெட்டுள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பிரித்வி ஷா ஆட்ட நாயகன் விருது வென்றார்.

1 More update

Next Story