கன்னி: தங்கள் பிள்ளைகளின் கல்விக் கடனில் ஒரு பகுதியை அடைத்துவிடுவீர்கள். உடல் குளிர்ச்சி அடையும். ஆதலால், ஐஸ்க்ரீம், கூல்டிரிங்ஸ் போன்றவைகளை தவிர்ப்பது நல்லது. உத்யோகஸ்தர்கள் விட்டுப்போன சில வேலையை முடிப்பீர்கள். குடும்பத் தலைவிகள் நகை சீட்டு அல்லது உண்டியலில் சேமிப்பது என்ற விசயத்தில் ஈடுபடுவர்.