அசத்தலான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் : பன்னீர், வெங்காயம், , பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, எலுமிச்சை சாறு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை, நெய், எள், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
அரைக்க: வேர்க்கடலை, தேங்காய்த் துருவல், தயிர், தனியா, வெந்தயம், பட்டை, கிராம்பு, ஏலக்காய் ஆகியவை.
முதலில் அரைக்க வேண்டியதை அரைத்து வைத்துக் கொள்ளவும்.
பின்னர் வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பன்னீரை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர்..நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், சேர்த்து நன்கு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி - பூண்டு விழுது, அரைத்த மசாலா, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மேலும் வதக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும். அதில் எலுமிச்சை சாறு சேர்க்கவும்.
பின்னர் பன்னீரை சேர்த்து மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும்.
பச்சை வாசனை போனதும், நெயில் எள்ளை தாளித்து அதில் சேர்த்து, இறக்கவும். சூப்பரான ஆந்திரா ஸ்டைல் பன்னீர் கிரேவி ரெடி.