துத்தநாகம், மாங்கனிஸ், குரோமியம் மற்றும் சிலின்யம் போன்ற நம் உடலுக்கு தேவையான அத்தியாவசிய தாதுக்கள் கிரீன் டீ இலையில் காணப்படுகிறது.
கிரீன் டீயில் ஆண்டி ஆக்சிடன்ட் மற்றும் வீக்கத்தை எதிர்த்து போராடும் பண்புகள் காணப்படுகிறது. இது காயத்தால் ஏற்பட்ட வீக்கத்தை எளிதில் குறைக்கும் தன்மைகொண்டது.
செரிமான கோளாறுகள் மற்றும் வயிற்று உப்புசம் போன்றவற்றை கிரீன் டீ பருகுவதன் மூலம் தவிர்க்கலாம்.
கிரீன் டீ கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது.
கிரீன் டீ இன்சுலின் திறனை மேம்படுத்துகிறது. இது ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
கிரீன் டீயில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், வாயில் விளைவிக்கும் கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சியைக் குறைத்து வாய் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
ஈஜிசிஜி(EGCG ) ஒரு ஆக்ஸிஜனேற்றியாகும். இது ப்ரீ ரேடிக்கல் சேதத்தை எதிர்த்துப் போராடி, புற்றுநோய் அபாயத்திலிருந்து பாதுகாக்கிறது.
கிரீன் டீயில் உள்ள காபின் மற்றும் கேட்டசின்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரித்து, உடல் எடையை குறைக்க செய்கிறது.
கிரீன் டீயில் எல்-தியானைன் (l-theanine )என்னும் கலவை நிறைந்துள்ளது. இது அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.