தினமும் ஒரு கேரட் சாப்பிடுங்க..அப்பறம் பாருங்க!!
கேரட்டில் பொட்டாசியம், வைட்டமின் A , பையோடின், வைட்டமின் B6, வைட்டமின் K1 போன்ற மினரல்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளன.
கேரட்டில் நார்ச்சத்து, பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், இது நாள் முழுவதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
கேரட்டில் வைட்டமின் ஈ சத்துக்கள் நிறைந்துள்ளன. இது முகப்பொலிவு மற்றும் சருமம் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
கேரட்டில் இருக்கும் கார்போஹைட்ரேட் உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவை சமமாக வைத்திருக்க உதவும்.
கேரட்டில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
கேரட்டில் உள்ள நார்ச்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் குடல் ஆரோக்கியமாக செயல்படுகிறது.
கேரட்டில் உள்ள பீட்டா கரோட்டின் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் உடல் எடையை வேகமாக குறைக்க உதவுகின்றன.
கேரட்டில் இருக்கும் வைட்டமின் A ,கண் பார்வையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
புற்றுநோய் உருவாவதை ஆரம்பத்திலேயே அழிக்கும் வல்லமை கேரட்டில் இருப்பதால் தினமும் எடுத்துக்கொள்ளுதல் நல்லது.