எந்தெந்த உணவு, எவ்வளவு நேரத்தில் செரிமானம் ஆகும் தெரியுமா?
தண்ணீர் விரைவாக செரிமானம் ஆகக்கூடியது. இருப்பினும் வயிறு நிரம்பியுள்ளதை பொறுத்து அது ஜீரணமாகும் நேரம் மாறுபடும். வெறும் வயிற்றில் தண்ணீர் பருகினால் 5 நிமிடங்களுக்குள் அது உறிஞ்சப்பட்டுவிடும்.
பழச்சாறு பருகினால் அது சுமார் 20 நிமிடங்களில் ஜீரணமாகிவிடும். அதில் இருக்கும் சத்துக்கள் விரைவாக உறிஞ்சப்பட்டு உடல் உறுப்புகளை சென்றடைந்துவிடும். ஸ்மூத்திகளை பருகினால் அவை செரிமானம் ஆவதற்கு சுமார் 30 நிமிடங்கள் தேவைப்படும்.
முலாம்பழம், ஆரஞ்சு, திராட்சை மற்றும் வாழைப்பழங்கள் சுமார் 30 நிமிடங்களில் செரிமானமாகிவிடும். ஆப்பிள், பேரிக்காய், கிவி, செர்ரி போன்றவை ஜீரணமாக சுமார் 40 நிமிடங்கள் செலவாகும். தர்பூசணி பழம் விரைவாக செரிமானமாகக்கூடியது.
பழங்களை விட காய்கறிகள் ஜீரணிக்க சற்று கூடுதல் நேரம் தேவைப்படும். இருப்பினும் கீரை, வெள்ளரிக்காய், குடை மிளகாய், தக்காளி உள்ளிட்ட நீர்ச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகள் செரிமானமாகி வயிற்றை விட்டு வெளியேற சுமார் 30 நிமிடங்கள் ஆகலாம்.
அரிசி, ஓட்ஸ் போன்ற தானியங்கள் செரிமானமாகி வயிற்றில் இருந்து வெளியேற சுமார் ஒன்றை மணி நேரம் ஆகலாம். அதுபோல் பருப்பு வகைகள், பீன்ஸ் போன்றவை செரிமானமாவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேவைப்படும்.
எண்ணெய் இல்லாத மீன் வகைகள், கடல் உணவுகளை சாப்பிட்டால் அவை 30 நிமிடங்களுக்குள் செரிமானமாகிவிடும். ஆடு, கோழி, மாடு, பன்றி போன்றவைகளின் இறைச்சிகளை உட்கொண்டால் அவை ஜீரணமாவதற்கு 4 முதல் 6 மணி நேரமாகும்.
கொழுப்பு நீக்கப்பட்ட பால் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பாலாடைக்கட்டிகள் ஜீரணிக்க சுமார் 2 மணி நேரமாகும். கெட்டியான பாலாடைக்கட்டிகள் ஜீரணமாக 5 மணி நேரம் கூட ஆகலாம்.
முட்டையின் மஞ்சள் கரு மட்டும் ஜீரணமாகுவதற்கு 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். முழு முட்டையும் செரிமானமாவதற்கு சுமார் 45 நிமிடங்களாகும்.
எள், சூரியகாந்தி, பூசணி விதைகள் ஜீரணமாக சுமார் 2 மணி நேரம் தேவைப்படும். பச்சை வேர்க்கடலை, பாதாம், முந்திரி பருப்புகள் போன்றவை ஜீரணமாகுவதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.