அல்சரை குணமாக்கும் சீத்தாப்பழம்..!
இந்தப் பழத்தில் வைட்டமின் சி, பி6, கால்சியம், இரும்புச்சத்து மற்றும் ஆண்டி ஆக்ஸிடண்ட் ஆகிய சத்துக்கள் உள்ளன.
சீத்தாப்பழம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது. இதை கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் பெண்கள் சாப்பிட்டு வரலாம்.
நீண்டகாலமாக அல்சர் நோயால் அவதிப்படுபவர்கள் சீதாப்பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களுக்கு அந்தப் பாதிப்பு வெகுவிரைவில் குணமாகும்.
சீத்தாப்பழத்தில் அதிக நார்ச்சத்து உள்ளதால், இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது.
சீத்தாப்பழத்தில் உள்ள நார்ச்சத்து, ஆரோக்கியமான செரிமான அமைப்பை ஊக்குவிக்கிறது. இது மச்சிக்கல் பிரச்சினையை தடுத்து குடல் ஒழுங்கை பராமரிக்கிறது.
சீத்தாப்பழத்தில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற அத்தியாவசிய தாதுக்கள் உள்ளன. இது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
சீத்தாப்பழத்தில் உள்ள பிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ், உடலில் இயற்கையான நீடித்த ஆற்றல் மற்றும் ஊக்கத்தை அளிக்கின்றன.
சீத்தாப்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ ஆரோக்கியமான சருமத்திற்கு பங்களிக்கிறது. மேலும் தோல் நெகிழ்ச்சித்தன்மையை மேம்படுத்துகிறது.