சர்க்கரை நோயாளிகள் தேன் சாப்பிடலாமா?
தேனில் கிட்டத்தட்ட 300 வகைகள் உண்டு.
ஒரு டீஸ்பூன் தேனில் 60 கலோரிகள் மற்றும் 17 கிராம் கார்போஹைட்ரேட் (மாவுச்சத்து) இருக்கிறது.
மேலும் இதில் வைட்டமின் சி, பி, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம், சுண்ணாம்பு சத்து மற்றும் ஆன்ட்டிஆக்ஸிடன்ட்ஸ் இருக்கிறது.
தேனில் உள்ள அதிகமான அளவு கார்போஹைட்ரேட், ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.
வெள்ளை சர்க்கரையில் (டேபில் சுகர்) ஒரு டீஸ்பூனில் 13 கிராம் கார்போஹைட்ரேட் இருக்கிறது.
ஒரு டீஸ்பூன் தேனில் வெள்ளை சர்க்கரையை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் அதிகமாக காணப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகள் எப்போதாவது சர்க்கரைக்கு மாற்றாக தேனை சாப்பிடலாம். ஆனால் சர்க்கரையுடன் சேர்த்து கூடுதலாக தேனை சாப்பிடக்கூடாது.
ரத்த சர்க்கரையை கட்டுப்பாடான அளவில் தக்கவைத்து வருபவர்கள், மிதமான அளவில் தேன் எடுத்துக் கொள்ளலாம்.
வழக்கமான சர்க்கரையை காட்டிலும் இதன் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு குறைவுதான் என்றாலும், அளவுக்கு மிகுதியாக எடுத்துக் கொள்ளக் கூடாது.