அடிக்கடி டீ ,காபி மற்றும் பானங்கள் குடிப்பவர்களா? இதனால் இதயம் பாதிக்கும் என தகவல்கள்..!
டெல்லி அமெரிக்கன் கல்லூரியின் இதயவியல் துறை நடத்தப்பட்ட ஆராய்ச்சிகளில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்கள் ஆகும்.
காபிக்குள் உற்சாகம் மட்டுமல்ல. உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் விவகாரமும் ஒளிந்து இருக்கிறது என்பது பலரும் அறியாத விஷயம்.
தினமும் 4 காபி குடிப்பதே இதயக்கோளாறுக்கு வழிவகுக்கலாம் என்று கூறி இருக்கிறார்கள். நாள்பட்ட காபி பழக்கத்தை டாக்டர்கள் எச்சரித்துள்ளார்கள்.
அதிகப்படியான டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் குடிப்பதால் இதய நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.
இந்த ஆய்வில் எவ்வளவு ஆரோக்கியமானவராக இருந்தாலும் ஒரு நாளைக்கு 400 மில்லி காபியின் நுகர்வு இதயக் கோளாறுக்கு வழிவகுக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது உடலின் 'பாராசிம்பேடிக்' அமைப்பை தொந்தரவு செய்யலாம். இது உயர் ரத்த அழுத்தத்தை உருவாக்கும். இதனால் இதய துடிப்பில் பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்துள்ளார்கள்.
காபி, டீ மற்றும் பானங்களை அடிக்கடி குடிக்கும் 18 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்களிடம் இந்த ஆய்வை நடத்தி இருக்கிறார்கள்.
அதில் பலருக்கு ரத்த அழுத்தம், இதய துடிப்பு பிரச்சினை இருப்பது தெரிய வந்தது.
இந்த ஆய்வின் போது பெண்களிடமும் அதிக அளவு காபி அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் இருப்பது தெரிய வந்தது.