உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 8 பேர் காயம்


உக்ரைன் மீது ரஷியா ஏவுகணை தாக்குதல் - 8 பேர் காயம்
x

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 382வது நாளாக போர் நீடித்து வருகிறது.

கீவ்,

உக்ரைன் , ரஷியா இடையே இன்று 1 ஆயிரத்து 382வது நாளாக போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இப்போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன. அதேவேளை, போரை முடிவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர் நிறுத்தம் தொடர்பாக 28 நிபந்தனைகள் கொண்ட உடன்படிக்கை டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இந்த நிபந்தனைகளில் சிலவற்றை ஏற்க உக்ரைன் மறுத்து வருகிறது. இதனால் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகளில் ரஷியா நேற்று இரவு டிரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. 653 டிரோன்கள், 51 ஏவுகணைகள் மூலம் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் பெரும்பாலான ஏவுகணைகள், டிரோன்கள் உக்ரைன் வான் பாதுகாப்பு அமைப்பால் நடு வானில் சுட்டு வீழ்த்தப்பட்டன. ஆனாலும், சில டிரோன்கள், ஏவுகணை உக்ரைனில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மீது தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்தனர்.

1 More update

Next Story