இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 29-11-2025
உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 29 Nov 2025 3:57 PM IST
இலங்கையில் அவசர நிலை
இலங்கையில் டிட்வா புயலால் ஏற்பட்ட இயற்கை பேரிடரை எதிர்கொள்ள அந்நாட்டு அரசு அவசரகால நிலையை பிரகடனம் செய்தது. பேரிடரில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 123 ஆக உயர்ந்துள்ளது. 130 பேர் மாயமாகியுள்ளனர். உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
- 29 Nov 2025 3:13 PM IST
பணம் பத்தும் செய்யும்: ராமதாஸ் குற்றச்சாட்டு
கூட இருந்தவர்களை விலைக்கு வாங்கியதாக தேர்தல் ஆணையத்தையே இப்போது அன்புமணி விலைக்கு வாங்கிவிட்டார். தேர்தல் ஆணையத்திடம் உண்மையை சொன்னாலும் ஏற்க மறுக்கிறது. ஏனென்றால் பணம் தேர்தல் ஆணையம் வரை போய்விட்டதாகவும் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
- 29 Nov 2025 1:50 PM IST
குறுவை மகசூல் பாதிப்பிற்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் இழப்பீடு: தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை
சேரன்மகாதேவி வட்டம் பிராஞ்சேரி கிராமம், மேலச்செவல் உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 350 ஏக்கரில் 3.5 லட்சம் வாழை மரங்கள் குலை விடும் நிலையில் முற்றாக முறிந்து விழுந்து விட்டன.
- 29 Nov 2025 1:49 PM IST
எதிர்காலம் குறித்து முடிவு: பிசிசிஐ ஆலோசனை
விராட், ரோகித் உடல் தகுதியை தக்கவைத்து சிறப்பாக செயல்பட முடியுமா? என்ற கேள்விக்குறி பலமாக நிலவுகிறது.
- 29 Nov 2025 1:48 PM IST
இலங்கையில் சிக்கி தவிக்கும் 150 தமிழர்கள்; அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்த மு.க. ஸ்டாலின்
இலங்கை விமான நிலையத்தில் சிக்கி தவிக்கும் பயணிகளுக்கு தேவையான உதவியை, தக்க நேரத்தில் வழங்கும்படியும் தமிழக அரசு கேட்டு கொண்டுள்ளது.
- 29 Nov 2025 1:23 PM IST
சென்னைக்கு தெற்கே 380 கி.மீ. தொலைவில் ‘டிட்வா’ புயல்.. தமிழக கடலோர பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்”
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் இன்று மாலை முதல் படிப்படியாக மழை அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 29 Nov 2025 1:16 PM IST
டிட்வா புயலால் இலங்கையில் மீண்டும் மண்சரிவு; 20 குழந்தைகள் உள்பட 120 பேர் மாயம்
இலங்கை அனுராதபுரத்தில் 100-க்கும் மேற்பட்ட புத்த பிக்குகள் சிக்கி தவித்து வருகின்றனர்.
- 29 Nov 2025 1:13 PM IST
முதல் ஒருநாள் போட்டி: இந்திய அணி ஆடும் லெவனில் ருதுராஜ் கெயிக்வாட் ?
முன்னாள் கேப்டன் தோனி, இந்திய அணி வீரர்களுக்கு விருந்து வைத்துள்ளார். ஒருநாள் போட்டியில் விளையாட இந்திய அணி வீரர்கள் ராஞ்சி வந்துள்ளதால், அவர்களை தனது இல்லத்திற்கு அழைத்து தோனி விருந்து வைத்துள்ளார்.விருந்து முடிந்த பின் தோனி மற்றும் விராட் கோலி ஒரே காரில் பயணித்தது குறிப்பிடத்தக்கது.


















