இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
Live Updates
- 2 Dec 2025 1:25 PM IST
ஆசிரியை கொலை - கைதானவர் தற்கொலை முயற்சி
தஞ்சையில் காதல் விவகாரத்தில் ஆசிரியை கொலை வழக்கில் கைதான நபர் சிறையில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
- 2 Dec 2025 1:16 PM IST
22 ஆண்டுகளில் இல்லாத வகையில்... சிங்கப்பூரில் 17 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனையை நீக்குவது கடும் விளைவுகளுக்கு வழிவகுக்கும் என சிங்கப்பூர் அரசு கூறி வருகிறது.
- 2 Dec 2025 1:15 PM IST
சென்னைக்கு அருகில் நீடிக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்.. திருவள்ளூர் மாவட்டத்திற்கு ‘ரெட் அலெர்ட்’
காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று இரவு சென்னை - புதுச்சேரி இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
- 2 Dec 2025 1:10 PM IST
வீட்டின் மீது மோதிய அரசுப் பேருந்து
ஆரணி: இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் தவிர்க்க நினைத்தபோது, வீட்டின்மீது மோதிய அரசுப் பேருந்து. அவ்வழியாக பயணித்தபோது உரிமையாளருக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை வழங்கிய எம்.பி. தரணிவேந்தன்.
- 2 Dec 2025 1:05 PM IST
நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக மத்திய அரசு மாற்றிக்கொண்டிருக்கிறது - பிரியங்கா காந்தி
அனைத்து போன்களிலும் Sanchar Saathi ஆப்பை கட்டாயமாக்குவது தனிநபர் உரிமைக்கு விடுக்கும் நேரடி அச்சுறுத்தல். ஒட்டுமொத்தமாக, நமது நாட்டை ஒரு சர்வாதிகார நாடாக இந்த அரசு மாற்றி வருகிறது. சைபர் மோசடிகளை தடுக்கும் வசதி அவசியம்தான், ஆனால் இது அந்த வரம்பையும் தாண்டி தனியுரிமையை கடுமையாக மீறுகிறது என பிரியங்கா காந்தி கூறியுள்ளார்.
- 2 Dec 2025 1:01 PM IST
சென்னை மாநகராட்சி பகுதிகளில் மழை நீரால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளுடன் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
- 2 Dec 2025 12:59 PM IST
பல தடைகளை தாண்டி அரசு டாக்டர் ஆன மாற்றுத்திறனாளி
குஜராத் - பாவ்நகர் பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான கணேஷ் பரையா பல தடைகளை தாண்டி டாக்டர் ஆகி சாதனை படைத்துள்ளார். 2018ல் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் உயரம் குறைவாக இருந்ததால் மருத்துவம் படிக்க அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் போராடி படிப்பை முடித்து இப்போது அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றுகிறார்.
- 2 Dec 2025 12:48 PM IST
எண்ணூரில் அதி கனமழை பதிவு
சென்னை எண்ணூரில் கடந்த 24 மணி நேரத்தில் 26 செ.மீ. அதி கனமழை பதிவாகி உள்ளது.
பாரிமுனை - 25 செ.மீ., ஐஸ் அவுஸ் - 22 செ.மீ. மழை, மணலி நியூ டவுண், திருவள்ளூர் பொன்னேரி தலா 21 செ.மீ. மழை பதிவு.
- 2 Dec 2025 12:42 PM IST
புழுவும் பொய் புகாரும்
பெங்களூரு விமான நிலையத்தில் பயணி ஒருவர் பிரபல ராமேஸ்வரம் கபே உணவகத்தில் வாங்கிய வெண்பொங்கலில் புழு இருந்த விவகாரம். காட்சிகள் வைரலான நிலையில் குறிப்பிட்ட அந்த பயணி தங்களிடம் ரூ.25 லட்சம் கேட்டு மிரட்டியதாகவும், தராததால் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதாகவும் ஓட்டல் நிர்வாகம் சார்பில் புகார் தரப்பட்டது. போலீஸ் விசாரணையில் அப்படி எந்த மிரட்டலும் விடுக்கப்படாதது தெரிய வந்ததால் பொய் புகார் கொடுத்ததாக உணவகத்தின் நிர்வாகிகள் மீதே பாய்ந்தது வழக்கு.
- 2 Dec 2025 12:15 PM IST
நாட்டின் 12 பொதுத்துறை வங்கிகளை இணைக்க மத்திய அரசு முடிவு?
வங்கிகளின் செயல்பாட்டு திறனை மேம்படுத்தவும், உலகளவில் போட்டி போடக்கூடிய வகையில் பெரிய வங்கிகளை உருவாக்கும் நோக்கில் இந்த திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது.















