இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025


LIVE
இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 02-12-2025
x
தினத்தந்தி 2 Dec 2025 9:00 AM IST (Updated: 2 Dec 2025 5:26 PM IST)
t-max-icont-min-icon

உள்ளூர் முதல் உலகம் வரை இன்று நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை உடனுக்கு உடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.


Live Updates

  • தப்பி ஓடியவர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு
    2 Dec 2025 5:26 PM IST

    தப்பி ஓடியவர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு

    இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவிப்பு.

    விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது

  • விசாகப்பட்டினத்தில் கண்ணாடி பாலம் திறப்பு
    2 Dec 2025 4:28 PM IST

    விசாகப்பட்டினத்தில் கண்ணாடி பாலம் திறப்பு

    ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி நடைபாலம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள்ளது. கைலாசகிரி மலை உச்சியில் கடல் மட்டத்தில் இருந்து 1,000 அடி உயரத்தில் 55 மீட்டர் நீளத்தில் கேண்டிலிவர் பாலமாக இது கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நடக்க 15 நிமிடங்களுக்கு ரூ.300 கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது 

  • விஜய் சாலைவலத்துக்கு அனுமதி மறுப்பு
    2 Dec 2025 4:24 PM IST

    விஜய் சாலைவலத்துக்கு அனுமதி மறுப்பு

    புதுச்சேரியில் தவெக தலைவர் விஜயின் சாலை வலத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்டம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    டிச.5ம் தேதி புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்த தவெக தரப்பில் அனுமதி கோரப்பட்டிருந்த நிலையில் புதுச்சேரி டிஐஜி சத்தியசுந்தரம் அறிவித்துள்ளார். முதல்-மந்திரி ரங்கசாமியை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் சந்தித்து அனுமதி கோரிய நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.

  • சென்னையில் மழை தொடரும்; வானிலை மையம்
    2 Dec 2025 4:13 PM IST

    சென்னையில் மழை தொடரும்; வானிலை மையம்

    சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு- மத்திய அரசு
    2 Dec 2025 3:43 PM IST

    வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு- மத்திய அரசு

    இந்தியாவில் மோசடி செய்து வெளிநாடு தப்பி ஓடிய 15 தொழிலதிபர்களால் ரூ.58,000 கோடி நிதி இழப்பு ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. விஜய் மல்லையா, நீரவ் மோடி, நிதின் ஜே சந்தேசரா, சேத்தன் ஜே சந்தேசரா, திப்தி சி சந்தேசரா, சுதர்சன் வெங்கட்ராமன், ராமானுஜம் சேஷரத்தினம் உள்ளிட்ட 15 பேர் தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

  • மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
    2 Dec 2025 3:40 PM IST

    மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்

    வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னைக்கு 60 கி.மீ தொலைவில் நிலை கொண்டு, மணிக்கு 8 கி.மீ வேகத்தில் நகர்கிறது. தென்மேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று மாலை வரை, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே நீடிக்கும். கடற்கரையை நெருங்கும் போது, வலுவடையும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • சாமி படங்களுக்கு இடையே மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை
    2 Dec 2025 3:39 PM IST

    சாமி படங்களுக்கு இடையே மதுபான பாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை

    கேரளாவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கும் சூழலில், குமரி மாவட்ட எல்லையில் உள்ள நெய்யாற்றின்கரை பகுதியில் வீட்டில் சாமி படங்களுக்கு இடையே மதுபான பாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. சுமார் 30 லிட்டர் மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பூசாரி அர்ஜுனன் கைது செய்யப்பட்டுள்ளார்

  • தீபமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீபக் கொப்பரை
    2 Dec 2025 3:36 PM IST

    தீபமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்ட மகாதீபக் கொப்பரை

    திருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நாளை நடைபெறவுள்ளதை ஒட்டி தீபமலை உச்சிக்கு அரோகரா கோஷத்துடன் கொண்டு செல்லப்பட்டது மகாதீபக்கொப்பரை.

  • சஞ்சார் சாதி கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்
    2 Dec 2025 3:08 PM IST

    சஞ்சார் சாதி கட்டாயமா? மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா விளக்கம்

    மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா கூறியதாவது:- சஞ்சார் சாதி செயலி வேண்டாம் என்றால், அதை நீக்கி கொள்ளலாம். போனில் வைத்திருப்பதா வேண்டாமா என பயனர்களே முடிவு செய்யலாம். ஆக்டிவேட் செய்த பின்னரே செயல்படும். இந்த செயலியை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது எங்கள் கடமை என்றார்.

1 More update

Next Story