முதுகுளத்தூரில் சிவன் கோவில் கும்பாபிஷேக விழா


முதுகுளத்தூரில் சிவன் கோவில் கும்பாபிஷேக விழா
x

கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி -தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர் வடக்கூர் பகுதியில் அமைந்துள்ள சிவன்- விஷ்ணு திருக்கோவிலில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசை, கணபதி, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்ய பூஜை, மகாலெட்சுமி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்து சாந்தி, கும்ப அலங்காரம், பூர்ணாஹுதி, தீபாராதனை, யாக சாலை பூஜைகள் நடைபெற்றன.

யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள இசையுடன், யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று, சிவன், விஷ்ணு கோவில்களை வலம் வந்தது. அதன்பின் விமான கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காட்டப்பட்டது.

அதன்பின்னர் விநாயகர், சுப்பிரமணிய சுவாமி, வள்ளி -தெய்வானை மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.

முதுகுளத்தூர், கடலாடி, பரமக்குடி, மதுரை, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story