தொடர் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் பேச்சுவார்த்தை


தொடர் அமளி: எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் பேச்சுவார்த்தை
x

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.

டெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில் பல்வேறு முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி, டெல்லி கார் குண்டு வெடிப்பு சமப்வம், வாக்கு திருட்டு குற்றச்சாட்டு, டெல்லி காற்று மாசுபாடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவதம் நடத்த வேண்டுமென எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், இந்த பிரச்சினைகளை முன்வைத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் 2வது நாளாக இன்றும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தொடர் அமளியில் ஈடுபட்டு வரும் எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இன்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் மக்களவையை சுமூகமாக நடத்த ஆதரவு அளிக்குமாறு எதிர்க்கட்சி எம்.பி.க்களிடம் சபா நாயகர் கோரிக்கை வைத்தார். அதேவேளை, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணி குறித்து விவாதிக்க அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story