திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை தங்க கவச அலங்காரம்


திருவள்ளூர் வீரராகவ பெருமாளுக்கு இன்று முதல் 5ம் தேதி வரை  தங்க கவச அலங்காரம்
x

திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம்.

திருவள்ளூர்

திருவள்ளூர் வைத்திய ஸ்ரீ வீரராகவ பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் 59-வது திவ்ய தேசம் ஆகும். இத்தல மூலவருக்கு தைலத்தில் மட்டுமே திருமஞ்சனம் நடைபெறும்.

இத்தலத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். திருமழிசை பிரான், வேதாந்த தேசிகரும் இத்தலம் மீது பாடல்கள் புனைந்துள்ளனர்.

இக்கோவிலுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து தங்களது முன்னோருக்கு திதி கொடுத்தும், புனித நீராடியும் கோவிலுக்கு சென்று, சயன கோலத்தில் உள்ள மூலவர் வைத்திய வீரராகவ பெருமாளை தரிசனம் செய்து வழிபடுவார்கள்.

இக்கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் மூலவருக்கு தங்க கவசமும், தைலக்காப்பும் சாற்றுவது வழக்கம். அதன்படி இன்று முதல் 5ம் தேதி வரை மூலவர் வீரராகவப் பெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். அதை தொடர்ந்து 6ம் தேதி முதல் வரும் 29ம் தேதி வரை, தைலக்காப்பு நடைபெறும்.

தைலக்காப்பு நடைபெறும்போது மூலவருக்கு திரை சாற்றப்பட்டிருக்கும். முகம் மற்றும் பாதத்தை, பக்தர்கள் தரிசிக்கலாம் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story