ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா


ஜெயங்கொண்டம் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா
x

கும்பாபிஷேக விழாவில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிதம்பரம் சாலையில் பிரசித்தி பெற்ற அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆனதையடுத்து ஊர் முக்கியஸ்தர்கள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் இணைந்து கும்பாபிஷேகம் செய்ய முன்வந்தனர்.

அதன்படி திருப்பணிகள் செய்யப்பட்டு கடந்த 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமம், கோபூஜை உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. யாகசாலை பூஜைகள் நிறைவடைந்த நிலையில், நேற்று காலை மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று கோவிலை வலம் வந்தது. அதனை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமான கலசத்திற்கு புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விழாவில் ஜெயங்கொண்டம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் தர்மசாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அருட் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story