அடுத்த படத்தில் 6 ஹீரோயின்களா? - ரவி தேஜா விளக்கம்

ரவி தேஜா தற்போது கிஷோர் திருமலா இயக்கும் " பாரத மகாசாயுலகு விக்னியாப்தி " படத்தில் நடித்து வருகிறார்.
சென்னை,
ரவி தேஜாவின் அடுத்த படத்தில் ஆறு ஹீரோயின்கள் நடிக்க உள்ளதாக சமூக ஊடகங்களில் ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது. இது இணையத்தில் பலவிதமான டிரோல்களை தூண்டி இருக்கிறது.
இந்நிலையில், ரவி தேஜாவின் குழு இந்த செய்திகளை ஆதாரமற்றது என்று உடனடியாக நிராகரித்துள்ளது. இது தொடர்பாக வெளியான அறிக்கையில்,
"ரவி தேஜாவின் அடுத்த படத்தில் 6 ஹீரோயின்கள் நடிப்பதாக பரவும் செய்தி முற்றிலும் போலியானது. இதுபோன்ற ஆதாரமற்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், பரப்ப வேண்டாம் என்றும் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்" என்று படக்குழு தெரிவித்துள்ளது.
ரவி தேஜா தற்போது கிஷோர் திருமலா இயக்கும் " பாரத மகாசாயுலகு விக்னியாப்தி " படத்தில் நடித்து வருகிறார். இது அடுத்த ஆண்டு பொங்கலுக்க ரிலீஸாக தாயாராகி வருகிறது. மேலும், இயக்குனர் சிவ நிர்வாணாவின் புதிய படத்தின் படப்பிடிப்பையும் அவர் தொடங்கியுள்ளார், ராஜமுந்திரி அருகே படப்பிடிப்பு நடந்து வருகிறது. சமீப காலமாக அவருக்கு வெற்றிகள் குறைவாக இருந்தாலும், பல சுவாரஸ்யமான படங்களில் கையெழுத்திட்டு வருகிறார்.






