சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் மன்சூர் அலிகான்

கோப்புப்படம்
நாளை முதல் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
சென்னை,
வேலையாக வந்த வேறு மாநிலத்தவருக்கு, தமிழ்நாட்டில் வாக்குரிமை கொடுக்க கூடாது என்பதை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தை நடத்த போவதாக நடிகர் மன்சூர் அலிகான் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், ‘வேலை செய்வதற்காக வடமாநிலம், தென் மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருகிறார்கள். ஆனால் அவர்களுக்கு தமிழகத்தில் வாக்குரிமையை கொடுக்கக் கூடாது.
தமிழகத்தின் உரிமைகளை படுகுழியில் தள்ளும் தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசை கண்டித்து சென்னையில் நாளை காலை 8 மணி முதல் 'சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம்' நடத்த போகிறேன்' என்றார்.
Related Tags :
Next Story






