மீண்டும் இணைந்த ’பேபி’பட கூட்டணி - டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு


Baby film team reunites - title announcement
x

ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

சென்னை,

கடந்த 2023- ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற படங்களில் ஒன்று பேபி. விஜய் தேவரகொண்டாவின் சகோதரர் ஆனந்த் தேவரகொண்டா கதாநாயகனாக நடித்திருந்த இப்படத்தில் வைஷ்ணவி சைதன்யா கதாநாயகியாக நடித்திருந்தார். எஸ்கேஎன் தயாரிப்பில் சாய் ராஜேஷ் இயக்கிய இப்படம் 5 பிலிம்பேர் விருதுகளை அள்ளியது.

தற்போது இவர்கள் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளார்கள். துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர், பாலகிருஷ்ணாவின் டாகு மகாராஜ் உள்ளிட்ட படங்களை தயாரித்த சித்தாரா எண்டெர்டெயின்மெண்ட் இப்படத்தை தயாரிக்கிறது.

#90ஸ் என்ற வெப் தொடரை இயக்கி பிரபலமான ஆதித்யா ஹாசன் இயக்கும் இப்படத்திற்கு அஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படத்திற்கு ’எபிக் ( பர்ஸ்ட் செமஸ்டர்)’ எனப்பெயரிடப்பட்டுள்ளது.

'பேபி' படத்தின் மூலம் பார்வையாளர்களை கவர்ந்த ஆனந்த் தேவரகொண்டா-வைஷ்ணவி சைதன்யா மீண்டும் இணைந்திருப்பது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

1 More update

Next Story