கோவில்பட்டியில் வரதட்சணை கேட்டு திருமணத்தை நிறுத்திய வாலிபர்: பெற்றோர் மீது வழக்குப்பதிவு

கோவில்பட்டி பகுதியில் ஒரு வாலிபரும், பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்தனர்.;

Update:2025-07-21 00:38 IST

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தெற்கு பஜார் முடுக்குத் தெருவைச் சேர்ந்த தம்பதி ஆஷ்குமார்- கஜலட்சுமி. இவர்களது மகன் பிரவீன்குமார் (வயது 25). இவரும் கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்த 25 வயதுப் பெண்ணும் பழகி வந்ததால், இருவரது பெற்றோரும் பேசி திருமணம் நடத்த முடிவு செய்துள்ளனர். இதனிடையே, துபையில் வேலை செய்துவந்த பிரவீன்குமார் ஊருக்குத் திரும்பவில்லை.

இந்த நிலையில், அந்தப் பெண் கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதில், கஜலட்சுமி கூடுதலாக தங்க நகை, ரொக்கம் கேட்பதாகவும், குறிப்பிட்ட தேதியில் திருமணத்தை நடத்தவிடாமல் தடுத்து ஏமாற்றுவதாகவும் தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக பிரவீன்குமார், அவரது பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்