ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

ஒகேனக்கலுக்கு நீர்வரத்து விநாடிக்கு 32,000 கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.;

Update:2025-07-20 16:09 IST

தருமபுரி,

கர்நாடக, கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள கே.ஆர்.எஸ்., கபினி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பாதுகாப்பு கருதி இந்த இரு அணைகளிலும் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 32,000

கன அடியிலிருந்து 43,000 கன அடியாக அதிகரித்துள்ளது.

இந்தநிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதித்து மாவட்ட கலெக்டர் சதீஷ் உத்தரவிட்டுள்ளார். மக்கள் பாதுகாப்பாக இருக்க நீர்வளத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்