வார விடுமுறையையொட்டி திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசைகளில் காத்திருந்து அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்தனர்.;
கன்னியாகுமரி,
'குமரியின் குற்றாலம்' என்று அழைக்கப்படும் திற்பரப்பு அருவி, கன்னியாகுமரி மாவட்டத்தின் சிறப்புவாய்ந்த சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த அருவிக்கு பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.
இந்த நிலையில், வார விடுமுறை தினத்தையொட்டி திற்பரப்பு அருவியில் இன்று ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வந்திருந்த சுற்றுலா பயணிகள், நீண்ட வரிசைகளில் காத்திருந்து அருவியில் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் உற்சாகமாக குளித்தனர். அங்குள்ள நீச்சல் குளத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் குளித்தும், விளையாடியும் மகிழ்ந்தனர்.