தூத்துக்குடி: மனைவி இறந்த சோகத்தில் கணவன் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடியில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் மனைவி இறந்துள்ளார். இதனால் கணவன் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.;
தூத்துக்குடி, தாளமுத்துநகரைச் சேர்ந்தவர் குணசேகரன் (வயது 60). இவரது மனைவி காசி அம்மாள். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். மகன் திருமணம் ஆகி நேரு காலனியில் தனி குடித்தனம் நடத்தி வருகின்றார், மகளுக்கு திருமணம் ஆகி செவத்தையாபுரத்தில் உள்ளார். காசிஅம்மாள் ஒரு வருடத்திற்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளார்.
இதனால் ஓராண்டு காலமாக தனியாக இருந்த குணசேகரன் மனைவியின் மரணத்தால் மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மதியம் அவர் தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாளமுத்துநகர் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.